குமரியில் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனை

0

முழு ஊரடங்கிற்கு முந்தைய தினம் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மது விற்பனையானது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மதுபானம் விற்பனையாகும்.

 அதுவே பண்டிகை காலம் மற்றும் விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினம் வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனையாவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டது. 

இதனையொட்டி நேற்றுமுன்தினம் மது பிரியர்கள் முன்கூட்டியே கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.
அப்போது போட்டி போட்டுக் கொண்டு மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் பீர் வகைகள் அதிகளவு விற்று தீர்ந்தன. மேலும் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மதுபானங்களும் விற்பனை ஆகின. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 21 லட்சத்து 33 ஆயிரத்து 880 க்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.மதுபானங்கள் மொத்தம் 7 ஆயிரத்து 480 பெட்டிகளும், பீர் வகைகள் 1,533 பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் கடை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)