நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முககவசம் அணியாத 11 பயணிகளுக்கு அபராதம்

0

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் முககவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள்.

மேலும் ரெயில்வே போலீசார் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணித்தால் அவர்களுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள். அதன்படி நேற்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், பாபு ஆகியோர் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து ரெயிலில் ஏறி திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது ரெயிலில் முககவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கு அபராதம் விதித்தனர். இதில் 11 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2200 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)