சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உண்டியலில் இவ்வளவு பணமா ....

0

 


குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்களை வைத்துள்ளனர். இந்த உண்டியல்கள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில், ஆய்வாளர் ராமலட்சுமி, கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ.13 லட்சத்து 53 ஆயிரத்து 956-ம், 8 கிராம் 400 மில்லி தங்கமும், 60 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணங்களும் வருமானமாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)