குமரி மாவட்டத்தில்போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

0குமரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

 தக்கலை அருகே உள்ள மணலிக்கரை புனித மரியகொரற்றி மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் அருட்பணியாளர் டயஸ் ரெஜின் தொடங்கி வைத்தார். பேரணியானது  வாழவிளை முக்கு, மணலிக்கரை சந்திப்பு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் போதை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ – மாணவிகள் சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சக்கர் மேரி டார்லிங் ரோஸ் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொல்லங்கோடு அரசு பள்ளி சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கி போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கடை போலீஸ் நிலையம் மற்றும் முன்சிறையில் உள்ள தொழிற்பயிற்சி மையம் சார்பில் போைத விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமை தாங்கினார். பேரணியானது முன்சிறை மகா தேவர் கோவிலில் இருந்து தொடங்கி முன்சிறை சந்திப்பு வரை சென்று பயிற்சி மையத்தை வந்தடைந்தது. 

மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேநிலைப்பள்ளி சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியானது பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி மணவாளக்குறிச்சி ஜங்சன் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் டேவிட் மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)