தீவிரமாக ப்ரோமோஷன் பணியில் இறங்கிய விக்ரம் படக்குழு

0

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் ,பஹத்பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்

இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வரும் ஜூன் 3-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தீவீரமாக ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப், பீஸ்ட் ஓடும் திரையரங்குகளில் விக்ரம் படத்தின் பெரிய பேனரை வைத்து ப்ரோமோஷன் செய்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது ஓடும் ரயில்களில் விக்ரம் படத்தின் பேனரை ஒட்டி வைத்து ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)