ரூ.200 கோடி வசூலைக் கடந்த 'பீஸ்ட்'


நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் சிலர் படத்தின் வசூல் பற்றி படம் வெளியான நாளிலிருந்தே வெளியிட்டு வருகிறார்கள்.

முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூலைக் கடந்த 'பீஸ்ட்' படம் இரண்டே நாளில் 100 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். இப்போது முதல் வார இறுதியில் மொத்தம் 5 நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மாஸ்டர்' படம் 200 கோடி வசூலைக் கடந்தது. இப்போது 'பீஸ்ட்' படமும் அதே 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் மொத்த வசூல் 200 கோடிதான் என்றார்கள். அந்தத் தொகையை 'பீஸ்ட்' படம் ஐந்தே நாட்களில் கடந்துவிட்டது.

2022ம் ஆண்டின் அதிக வசூலைப் பெற்ற தமிழ் படமாக 'பீஸ்ட்' அமையும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

Post a Comment

புதியது பழையவை