வேலைக்கு செல்லும்படி தந்தை கண்டித்ததால் ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை..

0

வேலைக்கு செல்லும்படி தந்தை கண்டித்ததால் ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது..

தண்டவாளத்தில் பிணம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு வாலிபரின் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள், இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் ராஜ், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த வாலிபர் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமுவின் மகன் சுப்பிரமணி (வயது 19) என்பது தெரிய வந்தது. ராமு அந்த பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். சுப்பிரமணி ஐ.டி.ஐ. முடித்து விட்டு அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்த நிலயைில் சுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் தனது செலவிற்கு பெற்றோரிடம் பணம் வாங்கி செலவழித்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இந்தநிலையில் வேலைக்கு செல்லும்படி சுப்பிரமணியை, அவரது தந்தை ராமு கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மேலப்பாளையம் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அங்குள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து திடீரென சுப்பிரமணி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
 மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)