ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்

0

தக்கலை :
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது.
தக்கலை அருகே உள்ள சாரோடு, வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் பாபு ராஜன். இவரது மனைவி செல்வி (வயது50). நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
அந்த பஸ் பத்மநாபபுரம் பகுதியில் வந்த போது செல்வியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சத்தமிட்டார். இதையடுத்து டிரைவர் பஸ்சை திருப்பி தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். போலீசார் பஸ்சில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஆனால் நகை எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து பஸ்சை போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓடும் பஸ்சில் நகையை யாராவது பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Post a Comment

0Comments
Post a Comment (0)