குமரியில் சினிமா படப்பிடிப்பு..

0

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் "ஓர்மகளில்" என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. ஒருதலை ராகம் படத்தில் அறிமுகமான நடிகர் சங்கர், அதற்கு பின்னர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்து விட்டு மலையாளத்தில் முழு நேர நடிகரானார். அங்கு இடை இடையே சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் "ஓர்மகளில்" என்ற மலையாள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை அருவிக்கரையை சேர்ந்த விஷ்வ பிரதாப் என்பவர் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். தொட்டிப்பாலத்தில் சங்கர் அவரது நண்பருடன் தொட்டிப்பாலத்தில் பேசிக்கொண்டு வருவது போல் படப்பிடிப்பு நடந்தது. தொட்டிப்பாலத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)