அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர் ..

0

வலிமை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் தனது 61-வது படத்தை நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித் குமார். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்ட கதையில் அஜித் குமார் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக அஜித் குமார் சுமார் 25 கிலோ எடை வரை குறைத்து புதிய கெட்டப்பில் ஒல்லியான அஜித் குமாராக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுசுடன் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த அசுரன் மிகப்பெரிய வெற்றியையும் பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)