பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி..

0

அஞ்சுகிராமம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

கன்னியாகுமரி அஞ்சுகிராமம், ஜூன்.8- அஞ்சுகிராமம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார். முதியவர் பலி அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் பால்துரை (வயது70). இவர் நேற்று மதியம் அழகப்பபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். அந்த பஸ் புன்னார்குளம் சந்திப்பு அருகே வந்த போது திருப்பத்தில் அதிவேகமாக திரும்பியதாக தெரிகிறது.

 அப்போது பஸ்சின் உள்ளே நின்று கொண்டிருந்த பால்துரை வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)