குமரி மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா

0

குமரி மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. முதலில் ஒற்றை இலக்கத்தில் தொடங்கிய பரவல் 100 வரை அதிகரித்தது. ஆனால் நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 15 ஆக குறைந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது. அதாவது 995 பேருக்கு பரிசோதிக்க பட்டதில் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 19 பேரும்,

 பெண்கள் 20 பேரும் அடங்குவர். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 21,202 பேரும், கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 81,178 பேரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)