STR-ன் அனல் பறக்கும் ஆக்‌ஷனும், ஹன்ஷிகாவின் அதிரடியும்

0

' மாநாடு’ வெற்றியை தொடர்ந்து சிம்புக்கு மற்றொரு மாபெரும் வெற்றியை கொடுக்க இருக்கும் ‘மஹா’ திரைப்படம்.  எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் சார்பில் மதிழயகன் தயாரிப்பில் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிலம்பரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். சிறப்பு   தோற்றமாக இருந்தாலும் படத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 40 நிமிடங்கள் வரும் சிம்புவின் அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும், அதிரடி வசனங்களும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

 

இதில்  ஹன்சிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்திருக்கும் ஹன்சிகா, பல ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டியிருக்கிறாராம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஹன்சிகா தொடர்ந்து 22 மணி நேரம் பணியாற்றி படக்குழுவினரை வியக்க வைத்துள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா,  பேபி  மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

‘மஹா’ சிம்புவுக்கு, ஹன்சிகாவுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

 

ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஞ்சு விஜய் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

 

இப்படம் வரும் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இது நீண்ட நாள் காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொண்டாட்டமாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)