நான் அதை செய்திருக்கக் கூடாது – வருத்தத்துடன் கூறியுள்ள இயக்குனர் ஹரி

0


இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான “சாமி” படத்தில் வரும் ஒரு சீனை நினைத்து வருத்தப்பட்டு கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தைப்பிடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் ஹரி. இவரின் இயக்கத்தில் தற்போது வெளியான அருண் விஜயின் “யானை” திரைப்படம் நேற்றைய தினம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இயக்கியுள்ள படங்களை பற்றி பேசியுள்ளார். அதாவது இவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான “தமிழ்” என்ற படம் தான் இவருக்கு முதல் படம் . இப்படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து சாமி, சிங்கம் போன்ற பல விறுவிறுப்பான கதைகளை இயக்கி உலைவர்.


இந்நிலையில் இயக்குனர் ஹரி “சாமி” படத்தில் விக்ரமின் என்ட்ரி சீனை நினைத்து வருத்தம் அடைந்துள்ளார். அதாவது அப்படத்தில் விக்ரமின் அறிமுக சீனை எடுக்கும் பொழுது முற்றிலும் லோக்கலாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணினேன் அதனால் தான் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் காட்சியை எடுத்திருந்தேன். ஆனால் அதை எண்ணி இப்போது வருத்தப்படுகிறேன் ஏனெனில் நான் மதுவுக்கும், போதைக்கும் எதிரானவன் என்று வருத்தத்துடன் பேசியுள்ளார். இவர் இப்பேட்டியில் அளித்திருக்கும் இந்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.Post a Comment

0Comments
Post a Comment (0)