நாகர்கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறு வாலிபர் மீது வழக்கு.

0


நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி மற்றும் போலீசார் சவேரியார் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அங்கு ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வாத்தியார் விளையை சேர்ந்த விக்னேஷ் ( வயது 32 ) என்பவர் வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் திடீரென சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்லசாமி கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)