அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது.

0

புதுக்கடை அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடிைய உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 கன்னியாகுமரி புதுக்கடை 

புதுக்கடை அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடிைய உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அரசு பஸ்

 மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணத்திற்கு ேநற்று முன்தினம் ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் புதுக்கடை அருகே உள்ள உதச்சிக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று ஆட்களை இறக்கி கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜு மகன் ராஜின் (வயது25) என்பவர் திடீரென பஸ் முன் வந்து நின்று தகராறில் ஈடுபட்டார். திடீரென அந்த வாலிபர் பஸ்சின் மீது கல் வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதைபார்த்த பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே ராஜின் அங்கிருந்து தப்பி ஓடினார்.

 வாலிபர் கைது

இதுகுறித்து பஸ் டிரைவர் மார்த்தாண்டத்தை சேர்ந்த நிக்சன் (49) புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜினை கைது செய்தனர். அவர் குடிபோதையில் பஸ் டிரைவரிடம் தகராறு செய்து விட்டு கல்வீசியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Post a Comment

0Comments
Post a Comment (0)