ரூ.1½ கோடியில் விரிவாக்க பணி: நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் நடைபாதை இடித்து அகற்றம்...

0

நாகர்கோவில்,

 ரூ.1½ கோடியில் விரிவாக்க பணியையொட்டி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் நடைபாதை இடித்து அகற்றப்பட்டது.

 அகற்றம் நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் கோர்ட்டு ரோட்டை விரிவாக்கம் செய்து சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து இருவழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் ரூ.1½ கோடி மதிப்பில் நடக்கிறது. 

டதி பள்ளி முன் கார் பார்க்கிங் அமைப்பதற்காக பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருவழிச் சாலையாக மாற்ற நடைபாதை இடையூறாக இருந்ததால் அந்த நடைபாதையை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடைபாதையை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. டதி பள்ளி சந்திப்பு முதல் வேப்பமூடு சந்திப்பு வரை நடைபாதை இடித்து அகற்றப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 அதைத் தொடர்ந்து இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதே போல பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையும் விரிவாக்கம் செய்து, சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன.

Post a Comment

0Comments
Post a Comment (0)