நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை தாயின் கள்ளக்காதலன் கைது

0

நாகர்கோவிலில் மாந்திரீகம் செய்வதாக வீட்டுக்குள் நுழைந்து பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரையும், உடந்தையாக இருந்ததாக மாணவியின் தாயாரையும் கைது செய்தனர்.

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). இவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரை ஒரு பெண் மாந்திரீகம் சம்பந்தமாக சந்தித்து வந்தார். இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது 17 வயதுடைய மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் சிவக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. சிவக்குமார் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

சம்பவத்தன்று பெண்ணின் வீட்டுக்கு சென்ற சிவக்குமார் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த மாணவி, தாயாரிடம் தெரிவித்தார். ஆனால் தாயாரோ இதனை கண்டு கொள்ளாமல் சிவக்குமாருக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுமி வெளிநாட்டில் உள்ள தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை செல்போன் மூலம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை இதுபற்றி மனைவியிடம் கேட்டார். ஆனால் அவரோ சரியான பதில் கூறவில்லை.

இதையடுத்து அந்த மாணவி தந்தையின் அறிவுறுத்தல்படி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மற்றும் மாணவியின் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)