குளச்சல் கடற்கரையில்மணற்பரப்ைப மூடிய கடல் நீர்

0

குளச்சல் கடற்கரையில்மணற்பரப்பை கடல் நீர் மூடியது.

கன்னியாகுமரி குளச்சல் :

 குளச்சல் கடற்கரையில்மணற்பரப்பை கடல் நீர் மூடியது. குளச்சல் கடற்கரையில் விசாலமான மணற்பரப்பு உள்ளது. தினமும் மாலை வேளைகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை ரசித்துவிட்டு செல்வார்கள்.

 இந்தநிலையில் குளச்சல் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து மணற்பரப்பு முழுவதும் கடல்நீர் மூடி உள்ளது. நேற்று மாலையில் குளச்சல் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மணற்பரப்பை கடல் நீர் மூடியிருந்ததால் அமர முடியாமல் திரும்பி சென்றனர். சிலர் அலை தடுப்பு சுவர் கற்கள் மீது அமர்ந்து கடலை ரசித்துவிட்டு சென்றனர்


Post a Comment

0Comments
Post a Comment (0)