இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்.. கமலுக்கு புது ஜோடி யார்....

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இதுவரை மூன்று தேசிய விருதுகளை வாங்கியுள்ள இவர் தமிழ் சினிமாவில் இறுதியாக விக்ரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது கிடப்பில் இருந்து வந்த இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.


லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படம் பல பிரச்சனைகளால் தடைப்பட்டு நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால் குழந்தை பெற்றுக் கொண்டதால் படத்திலிருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து தற்போது அவருக்கு பதிலாக திருமணமான நடிகை ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க உள்ளார் சங்கர். அந்த நடிகை வேறு யாருமில்லை பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தான்.
நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியான இவர் தான் கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)