மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

0

மார்த்தாண்டம் அருகே ரேஷன்கார்டை அடகு வைத்து மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 கன்னியாகுமரி குழித்துறை : மார்த்தாண்டம் அருகே ரேஷன்கார்டை அடகு வைத்து மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- 

தொழிலாளி 

மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் திருமாகுல சிங்கம் (வயது 58), தொழிலாளி. இவருக்கு மேரி (55) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல், மது குடித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள ரேஷன் கார்டை அடகு வைத்து மது குடித்ததாகவும், அதை மனைவி மேரி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

 தற்கொலை 

இதனால் மனம் உடைந்த திருமாகுல சிங்கம் நேற்று முன்தினம் இரவு முகாமுக்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் எழுந்ததும் வீட்டில் திருமாகுல சிங்கத்தை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடினார்கள். அப்போது அவர் முகாமுக்கு வெளியே உள்ள மரத்தில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

 அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து திருமாகுல சிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)