அரசு திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

0

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது. 

இதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். இது குறித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில், 'தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்' என்றார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)