கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி அபேஸ்

0

நாகர்கோவிலில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

 கோவிலுக்கு சென்றவர்

 நாகர்கோவில் பார்வதிபுரம் சிங்காரத்தோப்பை சோ்ந்தவர் இந்திரா பாய் (வயது73). இவர் நேற்று ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு சாப்பிட சென்றார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா பாய், கோவிலுக்கு வந்திருந்த மற்ற பெண்களிடம் விசாரித்தார். மேலும் கோவிலில் நகை எங்கேயாவது கிடக்கிறதா? என்று தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை.
கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நகையை யாரோ மர்ம ஆசாமி பறித்து சென்றது தெரியவந்தது. 

போலீசில் புகார்

 இதுகுறித்து இந்திரா பாய் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில்

 புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)