சூறைக்காற்றில் சேதமடைந்த அரசு பள்ளி மேற்கூரை

0

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி, தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வீரநாராயணமங்கலத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மொத்தம் 34 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஓட்டு கட்டிடத்தில் 3 வகுப்புகளும் அருகில் உள்ள காங்கிரீட் கட்டிடத்தில் 2 வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

 சம்பவத்தன்று மாலையில் வகுப்புகள் முடிந்த பின்பு மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். மறுநாள் காலையில் பள்ளிக்கு சென்றபோது ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் மழை மற்றும் சூறைக்காற்றில் பறந்து விழுந்து கிடந்தன. மேலும் வகுப்பறைக்குள் தண்ணீர் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை அருகில் உள்ள காங்கிரீட் கட்டிடத்துக்கு அழைத்து சென்று பாடம் நடத்தினர்.

 அந்த காங்கிரீட் கட்டிடமும் சற்று பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவ- மாணவிகளின் நலன்கருதி பள்ளிக்கூட கட்டிடத்தை போர்கால அடிப்படையில் உடனே சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளன


Post a Comment

0Comments
Post a Comment (0)