வேற லெவலில் மாறி இருக்கும் பாபநாசம் படத்தின் நடிகை – ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புகைப்படம்.

0


நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “பாபநாசம்”. இப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் தான் எஸ்தர் அனில். இவர் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்து இருந்தார்


இப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம். இதில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவனை அந்த மகள் கொன்றுவிட போலீசாரிடமிருந்து தப்பிக்க அப்பா போடும் மாஸ்டர் பிளானே அப்ப படத்தின் கதை ஆகும். இதில் விசாரணை செய்யும் போலீசாரிடம் உண்மையை மறைத்து சமாளிக்கும் வேடத்தில் சிறுமியாக எஸ்தர் அணில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதன் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்து உள்ள இவர் தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஏனெனில் தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்ட எஸ்தர் அணில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனால் ஷாக்கான ரசிகர்கள் அந்த சின்ன பொண்ணா இது? என்ற அதிர்ச்சியோட அப்புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.Post a Comment

0Comments
Post a Comment (0)