கனமழையால் கால்வாயில் உடைப்பு: கல்லடிமாமூடு-மாத்தூர் சாலை துண்டிப்பு..

0

கனமழையால் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் கல்லடிமாமூடு-மாத்தூர் சாலை துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி திருவட்டார்

கனமழையால் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் கல்லடிமாமூடு-மாத்தூர் சாலை துண்டிக்கப்பட்டது. சாலை துண்டிப்பு கல்லடிமாமூடு சந்திப்பில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. 

இந்த சாலையின் ஒரு பக்கம் பட்டணம் கால்வாய் ஓடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசுபாறை என்ற இடத்தில் கால்வாய் கரையில் கசிவு ஏற்பட்டு சிறு உடைப்பு ஏற்பட்டது. உடனே,பொதுப்பணித்துறையினர் மணல் மூடைகளை வைத்து தற்காலிகமாக சீரமைத்தனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

இதனால், கால்வாயில் ஏற்பட்ட சிறு உடைப்பு பெரிய அளவில் உருவானது. அதைதொடர்ந்து பொதுப்பணித்துறையினர் கால்வாயில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டு உடைப்பை சீரமைப்பதற்காக குருசுப்பாறை பகுதியில் சாலையை துண்டித்தனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும், முன்னறிவிப்பு இன்றி சாலை துண்டிக்கப்பட்டதால் மாத்தூர் தொட்டிபாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பெய்து வரும் கன மழையால் விளை நிலங்கள் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 எனவே, போர்க்கால அடிப்படையில் கால்வாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)