குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் பாதியில் கரைக்கு திரும்பின.
தடைகாலம் முடிந்து சென்று முதல் நாளே ஏமாற்றமானதால் மீனவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். கன்னியாகுமரி குளச்சல்: குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் பாதியில் கரைக்கு திரும்பின. தடைகாலம் முடிந்து சென்று முதல் நாளே ஏமாற்றமானதால் மீனவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
மீன்பிடிக்க சென்றனர்
ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்து உள்ளது. இந்த தடைக்காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கன்னியாகுமாரி சின்னமுட்டம் கடல் பகுதி கிழக்கு கடற்கரையில் உள்ளதால் அங்கு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை தடைக்காலம் அமலில் இருந்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மேற்கு கடற்கரை பகுதிகளில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் இருந்தது.
இந்தநிலையில் தடைக்காலம் முடிந்ததால் நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கருத்துரையிடுக