மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்...

0

மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 


 ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. அந்த கூட்டுக் குடிநீர் குழாயில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது.

 மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான பள்ளமும் உருவாகி உள்ளது. இந்தநிலையில் ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜயகுமார் எடுத்த நடவடிக்கையின் மூலம் குழாயில் ஏற்பட்ட உடைப்பு நேற்று முன்தினம் சரி செய்யப்பட்டது. 

ஆனால் அந்த இடத்தில் நேற்று அதிகாலையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.

 இதனால் ஆத்திரமடைந்த ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி தலைவர் பேரின்ப விஜயகுமார் தலைமையில் பொதுமக்கள் நேற்று இரவு 9 மணிக்கு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)