ரெயிலில் இளம்பெண்ணிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு

0

இரணியலில் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் உதவி கேட்பது ேபால் நடித்து நூதன முறையில் செல்போைன பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.


 கன்னியாகுமரி நாகர்கோவில் :

 இரணியலில் ரெயிலில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் உதவி கேட்பது ேபால் நடித்து நூதன முறையில் செல்போைன பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 இளம்பெண் 

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சிவசங்கரி (வயது21). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தினமும் காலையில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணிகள் ரெயிலில் செல்வது வழக்கம்.

 அதன்படி நேற்று சிவசங்கரி வேலைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அவரது அருகில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். 

உதவி கேட்டார் 

இரணியல் ரெயில் நிலையத்தில் வந்த போது அந்த வாலிபர் சிவசங்கரியிடம், 'நான் இரணியலில் இறங்க வேண்டும். எனது உறவினர் வீடு இங்கு உள்ளது. எனது செல்போன் சார்ஜ் இல்லாததால் சுவிட்ச்-ஆப் ஆகிவிட்டது. எனவே எனது உறவினரை ெதாடர்பு கொண்டு அவரை அழைக்க உங்களது செல்போனை தருவீர்களா?' என கேட்டார். அவரது பேச்சை நம்பிய சிவசங்கரியும் தனது செல்போனை கொடுத்தார். செல்போனை வாங்கி அந்த வாலிபர், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

 அந்த ெசல்போனின் மதிப்பு ரூ.15 ஆயிரம் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசங்கரி நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்...


Post a Comment

0Comments
Post a Comment (0)