பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து வரும் திருச்சிற்றம்பலம் – கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

0


நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக ஹிட் அடித்து வருகிறது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இதில் தனுஷ் உடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசிகண்ணா போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் கடந்த 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் வெளியானது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனுஷின் திரைப்படம் திரையரங்கில் வெளியானதை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 9.25 கோடி வசூல் செய்திருந்தது.

மேலும் ரசிகர்களிடம் அருமையான வரவேற்பு கிடைத்து வருவதால் இரண்டாவது நாள் வசூல் அதிகரித்து உள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 17.50 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1.66 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் 19.70 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ் தான் என்று கூறி வருவதோடு உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர் 

Post a Comment

0Comments
Post a Comment (0)