கார்த்தி, அத்தி ஷங்கர் நடிப்பில் முத்தையா இய்க்கத்தியில் உருவாகியுள்ள 'விருமன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது..
'சுல்தான்' படத்திற்கு பின் ஒரு வருடங்கள் கழித்து கார்த்தியின் படம் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான 'கொம்பன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்..
கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்
விருமன்' படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் கதாநாயகி அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 'விருமன்' படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். முத்தையாவின் முந்தைய படங்களை போலவே இந்த படமும் எமோஷனல், செண்டிமெண்ட் டிராமாவாக இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். குடும்ப பின்னணியில் தரமான ஆக்ஷன் டிராமாவாக 'விருமன்' படம் உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் இருவருமே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், அதிதிக்கு சூப்பர் என்ட்ரியாக இந்தப்படம் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் 'விருமன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Rating : 3/5