பாதாள சாக்கடை பணி , நாகர்கோவிலில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

0

பாதாள சாக்கடை பணிக்காக நாகர்கோவிலில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 போக்குவரத்து மாற்றம்

 நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை பாதாள சாக்கடையை இணைக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நடக்க இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

 வடசேரியில் இருந்து வேப்பமூடு, அண்ணா பஸ் நிலையம், சவேரியார் சந்திப்பு மார்க்கமாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக வேப்பமூடு சந்திப்பில் இருந்து பொதுப்பணித்துறை சாலை வழியாக செட்டிக்குளம் சந்திப்பு,

 சவேரியார் ஆலய சந்திப்பு வழியாகவும், கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து கோட்டார் ரெயில் நிலையம் வழியாக கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் மற்றும் மணக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் செட்டிக்குளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாகவும் செல்ல வேண்டும். 

மேலும் பீச்ரோடு சந்திப்பில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையாக ஆயுதப்படை மையம் சாலை, ராமன்புதூர் வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Post a Comment

0Comments
Post a Comment (0)