சிம்புவின் மிரட்டலான நடிப்பு “வெந்து தணிந்தது காடு” படத்திற்கு வெற்றியை பெற்று தரும் – பிரபல எழுத்தாளர் பேட்டி..!

0
நடிகர் சிம்பு திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார் இவர் தனது படத்திற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் அதற்கான பலனையும் அண்மை காலமாக அவர் பெற்று வருகிறார் அந்த வகையில் மாநாடு படம் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியது அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார் சிம்பு உடல் எடையை எல்லாம் குறைத்து 18 வயது பையனாக நடித்துள்ளார் மேலும் பல்வேறு விதமான தோற்றங்களில் மாறி மாறி இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது அது படத்தின் டிரைலரில் கூட நாம் பார்க்க முடிந்தது.மாநாடு திரைப்படம் போல இந்த படமும் நிச்சயமா அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு படம் வருகின்ற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடிப்பு அளப்பரியது அவரது தோற்ற பயணம், உடல் பயணம் இதெல்லாம் என்னை புருவம் உயரச் செய்தது இந்த படத்திற்காக அவரது நடிப்பையும் தாண்டி அவரது பயணம் அளப்பரியது.


இயக்குனர் கௌதம் மேனனை விட இந்த படத்திற்காக நான் நம்புவது நடிகர் சிம்புவை தான் என மிகப்பெருமையாக பேசு இருந்தார். மேலும் ஒவ்வொரு சீனிலையும் அவரது தோற்றம் வித்தியாசமாக இருக்கும் எனவும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாரடத்திற்குரியது என ஜெயமோகன் பேசினார்.

திரை உலகில் நீண்ட வருடமாக இருக்கும் ஜெயமோகன் எந்த ஒரு நடிகரையும் இப்படி புகழ்ந்து பேசியதே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)