மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்திய விவகாரம்: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

0

மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்திய விவகாரத்தில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 இடைநீக்கம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் ஆபாசமாக பாடம் நடத்தியதாக 2 மாணவிகளால் புகார் அளிக்கப்பட்டது.

 இதுதொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
 இதையடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாசை, முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)