அடேங்கப்பா.. பிக் பாஸ் சீசன் 6 வீடு எப்படி இருக்குன்னு பாருங்க...

0

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வரும் ஞாயிறு முதல் பிரம்மாண்டமாக அனுதினமும் அடுத்த 100 நாட்களுக்கு நமது வீட்டு டிவிகளில் ஓட போகிறது.

 மொபைல் போன் உள்ளிட்ட கேட்ஜட்களை தூக்கி எறிந்து விட்டு பிரபலங்கள் பலர் இந்த முறையும் நூறு நாட்களில் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில், அவர்கள் தங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 வீடு இந்த முறை எந்தளவுக்கு பிரம்மாண்டமாய் இருக்குன்னு பிக் பாஸ் வீட்டுக்குள்ளே எக்ஸ்க்ளூசிவாக சென்று பார்க்கலாம் வாங்க.. 


டோட்டல் மைண்ட் கேம்

வெளியே பிரபலங்கள் எந்தளவுக்கு பாப்புலாரிட்டியோட இருக்காங்க என்பது முக்கியமில்லை. உள்ளே சுற்றி இருக்கும் அத்தனை கேமரா கண்களுக்கு முன்பாகவம் அதை பார்த்துக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான ரசிகர்கள் முன்பாகவும் எப்படி நடந்து கொள்கின்றனர். அளவா சிரிக்கிறாங்களா, உண்மையா இருக்காங்களா? எடுத்ததுக்கு எல்லாம் கோபப்படுறாங்களா, க்ரிஞ்சா இருக்காங்களா? வின்னர் ஆவாங்களா? என மக்கள் எடைபோடும் ஒரு டோட்டல் மைண்ட் கேம் தான் இந்த பிக் பாஸ்.



6வது சீசன் விஜய் டிவியில் வரும் அக்டோபர் 9ம் தேதி மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து விக்ரம் படத்தை முடிக்கும் பணிகளுக்காக கமல் சார் வெளியேறி சிம்பு ஹோஸ்ட்டாக என்ட்ரி கொடுத்த நிலையில், மீண்டும் பிக் பாஸ் சீசன் 6க்கு ஹோஸ்ட்டாக கமல் வீட்டை சுற்றிக் காட்டும் முன்பாக ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் பிக் பாஸ் வீட்டுக்குள் எடுத்த பிரத்யேக புகைப்படங்களையும், என்ன எல்லாம் சிறப்பு அம்சங்கள் இந்த வருஷம் இருக்குன்னு இங்கே பார்க்கலாம் வாங்க?


பிக் பாஸ் வீடு

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷன் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்த 100 நாட்களுக்கு நமக்கு பிடித்த பிரபலங்களும், பிடிக்கப் போகும் பிரபலங்களும் தங்கப் போகும் இடம் எப்படி இருக்குன்னு பார்க்கும் ஆவல் அனைவருக்கும் இருக்கத்தான் செய்யும். இந்த 6வது சீசனுக்கான பிக் பாஸ் வீடும் பக்காவாக ரெடியாகி விட்டது. அதன் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.


பிரம்மாண்ட என்ட்ரி

பிக் பாஸ் டைட்டிலுக்கு ஏற்ப அதன் நுழைவு வாயிலும் இந்த சீசனில் பிரம்மாண்டமாகவே காட்சியளிக்கிறது. இருபுறமும் புல்வெளி உடன் கார்டன் ஏரியா, பளபளக்கும் சோபாக்கள் என ஆரம்பமே அமர்க்களமாக இருக்க உள்ளே என்னவெல்லாம் மாற்றங்களை செய்துள்ளனர் என்று பார்த்தால், ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான சர்ப்ரைஸ் இந்த சீசனில் காத்திருக்கிறது


நீச்சல் குளம் இருக்கு

பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2ல் நீச்சல் குளம் பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர், சில பல காரணங்களுக்காக பிக் பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தை பயன்படுத்த விடவில்லை. சமீபத்தில் பிக் பாஸ் நீச்சல் குளத்திற்கு கீழ் பாதாள சிறையை உருவாக்கி இருந்தனர். இந்நிலையில், இந்த முறை நீச்சல் குளத்தில் தண்ணீர் இருக்கிறது. மேலும், அதன் அருகே சன் பாத் எடுக்கும் விதமாக இரு சாய்வு நாற்காலிகளும் அமைக்கப்பட்டுள்ளன


ஒண்ணாவே தூங்கலாம் ஆண்கள், பெண்கள் என தனித்தனி படுக்கையறைகள் இந்த முறை இல்லை. பெட்ரூம் ஏரியா ஒன்று தான். எங்கே பார்த்தாலும், பூ போட்ட படுக்கையறைகள் கண்ணை பறிக்கும் விதமாக செம க்யூட்டாகவும் அழகாகவும் இருந்தன. பிக் பாஸ் போட்டியாளர்கள் அடுத்த 3 மாதத்துக்கு இங்கே தான் ஒண்ணா தூங்க போகின்றனர்.


சூப்பர் கிச்சன் ப்ரீத்தி ஸோடியாக் மற்றும் நிப்பான் பெயிண்ட் தான் இந்த முறையும் விளம்பர பார்ட்னர். ப்ரீத்தி கேஸ் அடுப்பு, மிக்சர், பின்னாடி ப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் இந்த சீசனிலும் அப்படியே இருக்கிறது. கிச்சன் டிசைனும் பார்க்க ரொம்ப சூப்பராகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை வரும் போட்டியாளர்களில் எத்தனை பேருக்கு சமைக்கத் தெரியும், எத்தனை பேருக்கு சாப்பிட மட்டுமே தெரியும் என்பது ஷோ ஆரம்பம் ஆன உடனே தெரிந்து விடும்.


கூண்டுக்கிளி கம்பி ஜெயில், கண்ணாடி ரூம், பாதாள சிறை என பல ஜெயில் செட்டப்பை பார்த்து வந்த பிக் பாஸ் வீடு இந்த முறை கூண்டு செட்டப்பில் அமைந்துள்ளது. இன்னமும் சிறை பிக் பாஸ் வீட்டுக்குள் வைக்கப்படவில்லை. இந்த முறை சிறைக்கு செல்பவர்களின் நிலை ஜாலியாக இல்லாமல் ரொம்பவே சிரமமாக இருக்கும் எனத் தெரிகிறது.


டைனிங் டேபிள் பெரிய அளவில் டைனிங் டேபிள் இல்லாமல் ரொம்பவே குட்டியா வட்டமா ஒரே ஒரு கேமரா சுற்ற அழகாக டைனிங் டேபிள் அமைந்துள்ளது. இங்கே எப்படியெல்லாம் சண்டை வரப் போகுது, காசிப்ஸ் எப்படி பேசப் போறாங்கன்னு கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்


பாத்ரூம் ஏரியா

பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் இரு பெரிய கண்ணாடி சைக்கிள் போன்ற டிசைனில் முன்பு வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பூ டிசைன் போடப்பட்டுள்ளது. குளியலறை அருகே அமர்வதற்கான இடத்தின் சோபா செட்களும் இம்முறை பளிச்சென பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளன.


டிசைன் கான்செப்ட் என்ன? வீட்டின் அனைத்து இடங்களிலும் பெண்மையை குறிக்கும் விஷயங்களும், பெண்களின் அழகான கண்களும், ஒரு பெண்ணின் அவுட்லைன் ஓவியம், பூ டிசைன், படுக்கையறையில் பூக்களின் டிசைன், பிரம்மாண்ட ரோஜாப்பூ டிசைன் என லேடிஸ் ஸ்பெஷலாக இந்த 6வது சீசன் கான்செப்ட் உள்ளதாக தெரிகிறது. பிக் பாஸ் சீசன் 2வில் மட்டுமே பெண் போட்டியாளர் டைட்டில் வென்ற நிலையில், இந்த சீசனிலும் ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பையும் இந்த பிக் பாஸ் வீட்டின் டிசைன் எண்ணத் தூண்டுகிறது.



Post a Comment

0Comments
Post a Comment (0)