இரட்டைக் குழந்தைக்கு பெற்றோர் ஆன நயன்தாரா - விக்னேஷ் சிவன்

0

சினிமா நட்சத்திர தம்பதியர்களான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

''நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்'' என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.


கடந்த ஜூன் 9-ம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னர் காதலர்களாக இருந்து வந்தனர். வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்திருக்கலாம் என தகவல். இந்நிலையில், பலரும் தம்பதியருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)