பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்ட தகவல்.

0


பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கிட்டத்தட்ட 20 நாட்கள் ஒளிபரப்பாகியுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் சாந்தி வெளியேற்றப்பட ஜி பி முத்து தானாகவே தன்னுடைய மகனின் உடல்நலக் குறைபாடு காரணமாக வெளியேறிக்கொண்டார்.

ஜி பி முத்துவிற்கு பதிலாக இந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் களமிறக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் இந்த நிகழ்ச்சி குறித்து பேசி உள்ளார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை. ஆகையால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். அப்படியே நிகழ்ச்சிக்கு சென்றாலும் நான்தான் பிக் பாஸாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஜிபி முத்துவுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொள்வது சந்தேகமே என சொல்லப்படுகிறது.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)