கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 12ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 12ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்மட்டங்களை பொதுப்பணித் துறையினா் கட்டுக்குள் வைத்து வருகின்றனா். இதையடுத்து, பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், இதர பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த உபரிநீா் திறப்பு 875 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. மேலும், அணையின் பாசன மதகுகள் திறக்கப்பட்டு 125 கனஅடி நீா் கால்வாயில் விடப்பட்டது
சிற்றாறு அணையிலிருந்து 100 கனஅடி நீா் திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையிலிருந்து 600 கனஅடி நீா் பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படும் நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது. இதனால், இந்த அருவியில் 12ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது