சம்பந்தமாக குமரிக்கு காதலி கிரீஷ்மாவை அழைத்து வந்து 2-வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். ஜூஸ் சேலஞ்ச் நடத்திய இடத்தை அடையாளம் காட்டினார். மாணவர் கொலை வழக்கு குமரியில் மாணவர் ஷாரோன்ராஜை, அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கீரீஷ்மா அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் தடயங்களை அழித்ததாக கிரீஷ்மா தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது கிரீஷ்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது.
இதனால் கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாணவர் ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்ட இடம் காதலி கிரீஷ்மாவின் வீடு. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
'ஜூஸ் சேலஞ்ச்'சில் கொல்ல முயற்சி
'ஜூஸ் சேலஞ்ச்'சில் கொல்ல முயற்சி
அப்போது ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என்பதை அவர் நடித்துக் காட்டினார். மேலும் மாணவருக்கு விஷம் கொடுக்க பயன்படுத்திய பாத்திரம் உள்ளிட்ட ஆதாரம் சிக்கியதாக தெரிகிறது. மேலும் போலீஸ் காவல் விசாரணையில், மாணவர் ஷாரோன்ராஜை ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் கிரீஷ்மா தீர்த்துக் கட்ட முயன்றதும் அம்பலமானது. அதாவது குளிர்பானத்தை மடக், மடக் என விடாமல் குடிக்க வேண்டும். இதை கிரீஷ்மா, மாணவர் ஷாரோன்ராஜிடம் தெரிவித்து, இந்த சவாலை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். அவருடைய சவாலை ஏற்று ஷாரோன்ராஜிம் குடித்துள்ளார்.
அந்த சமயத்தில் குளிர்பானம் கசக்கிறதே? என கூறி உடனே அவர் துப்பியுள்ளார். அதற்கு, காலாவதியான குளிர்பானமாக இருக்கும் என கிரீஷ்மா கூறி ஷாரோன்ராஜை நம்ப வைத்துள்ளார். ஆனால் அந்த குளிர்பானத்தில் அவர் விஷம் கலந்து கொடுத்துள்ளார். குளிர்பானத்தை முழுவதும் துப்பியதால் அப்போது ஷாரோன்ராஜிக்கு ஒன்றும் ஆகவில்லை.
ஆனால் அதன் பிறகு வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன்ராஜை கிரீஷ்மா கொன்றது தெரிய வந்தது.
குமரியில் மீண்டும் விசாரணை
இதனை தொடர்ந்து கிரீஷ்மாவை நேற்று மீண்டும் குமரியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஜூஸ் சேலஞ்ச் நடத்திய இடம் மற்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றிய இடங்கள் போன்ற இடங்களுக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கிரீஷ்மாவின் முகமும், உடலும் தெரியாதபடி கருப்பு அங்கியால் மறைக்கப்பட்டிருந்தது. இதற்காக கேரளாவில் இருந்து மகளிர் போலீசார் உள்ளிட்ட மொத்தம் 20 போலீசார் 6 வாகனங்களில் குமரிக்கு வந்தனர்.
முதலில் மாணவர் ஷாரோன்ராஜ் படித்த நெய்யூரில் உள்ள கல்லூரிக்கு சென்றனர். அப்போது கேரள போலீசாின் விசாரணைக்கு உதவியாக இரணியல் போலீசாரும் உடன் இருந்தனர். மேலும் குளிர்பானம் வாங்கிய கடையை கிரீஷ்மா அடையாளம் காட்டினார். பின்னர் ஜூஸ் சேலஞ்ச் நடத்திய இடமான குழித்துறை பழைய பாலம், திற்பரப்பு அருவிக்கு அருகில் உள்ள விடுதி உள்பட 4 இடங்களில் விசாரணை நடந்தது. திற்பரப்பு விடுதியில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி, ஜூலை 18 ஆகிய 2 நாட்கள் இருவரும் அங்கு தங்கியுள்ளனர். அந்த விடுதியில் உள்ள ஆவணங்களை சோதனையிட்டு வீடியோ பதிவு செய்தனர். விடுதிக்கு அழைத்து வந்த போது கிரீஷ்மா எந்தவொரு பதற்றமும் இன்றி காணப்பட்டார். அங்கு 2 மணி நேரம் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.
கேரள போலீஸ் அதிகாரி விளக்கம்
கேரள போலீஸ் அதிகாரி விளக்கம்
இந்த விசாரணை குறித்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றவியல் துணை சூப்பிரண்டு ஜான்சன் கூறுகையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கிரீஷ்மாவின் போலீஸ் காவல் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. விசாரணை அனைத்தும் நல்ல முறையில் நடைபெற்றது. நாளை நெய்யாற்றின்கரை கோர்ட்டில் கிரீஷ்மா ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவித்தார். இந்த விசாரணையையொட்டி திற்பரப்பு விடுதி பகுதியில் அருமனை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கருத்துரையிடுக