பூதப்பாண்டி அருகே பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு..

0


 பூதப்பாண்டி அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்த விவசாயி மனைவியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். 


 பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசல தேவர், விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி (வயது 58). 
இவர் தினமும் அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள இருமுடி சோழ விநாயகர் கோவிலுக்கு சென்று சுத்தம் செய்வது வழக்கம். அதன்பேரில் நேற்று அதிகாலையும் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று நடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். 


நகை பறிப்பு 

அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்தார். அந்த நபர் கோவிலின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தமிழரசியிடம் வந்து கோவில் பூசாரி எப்போது வருவார் என்று கேட்டுள்ளார். 
அதற்கு தமிழரசியும் பதில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த மர்ம நபர் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தார். சுதாரித்துக் கொண்ட தமிழரசி நகையை பிடித்துக் கொண்டு திருடன்... 
திருடன் ..
என்று சத்தம் போட்டார். அதிகாலை நேரம் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை. இதற்கிடையே நகை இரண்டாக அறுந்து 2 பவுன் தமிழரசி கையிலும், 2 பவுன் மர்ம நபர் கையிலும் சிக்கியது. கையில் சிக்கிய நகையுடன் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். 


 இதுகுறித்து தமிழரசி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.
 அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்


Post a Comment

0Comments
Post a Comment (0)