மறக்க முடியாத மாஸ் கம்பேக்.! சிம்புவின் “மாநாடு” மட்டும் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்.?

0


நடிகர் சிம்பு வந்தா ராஜா வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் தோல்வியை தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அப்படி இருந்தும் கூட அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. இதனால் சிம்பு மீண்டும் பழையபடி எப்போது படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.எனவே அவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. படம் நன்றாக இருந்தாலும் கூட சிம்புவிற்கு பெரிய கம்பேக் கொடுத்த படமாக தெரியவில்லை.

மாநாடு

இதனை தொடர்ந்து அதே 2021-ஆம் ஆண்டு நவம்பர் 25 இதே தினத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படம் வெளியானது.  இந்த படத்தின் மூலம் சிம்பு + யுவன் கூட்டணி இணைந்தால் என்பதாலே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. அதுபோல, படத்தை வெங்கட் பிரபு இயக்கியதால் கண்டிப்பாக சிம்புவிற்கு இந்த படம் பெரிய காம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


அதைப்போல படமும் மிகவும் அருமையாக இருந்ததால் படம் மிக்பெரிய வெற்றியடைந்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரியான வெற்றிப்படத்தை சிம்பு கொடுத்தார் என்றே கூறலாம்.  படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகள் திரையரங்குகளில் தெறிக்கவிட்டது என்றே கூறலாம்.  படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிம்பு கண்லங்கி தனக்கு பல பிரச்சனைகள் வந்தது என்றும் அதனை அனைத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறிவிட்டு என்னை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

Ads

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கம்பேக் என்றால் சிம்பு மாநாடு படத்தில் கொடுத்த கம்பேக் தான். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிக்க வந்து அந்த படம்  100 கோடி வசூலை குவித்தது என்பது சாதாரண விஷயம் இல்லை. இதன் மூலமே சிம்புக்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் எந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

1YearOfMegaBBMaanaadu

இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் 1YearOfMaanaadu,

1YearOfMegaBBMaanaadu,

 1YrOfMegaBBMaanaadu என்ற

 ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்


வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிம்புவுடன் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சேனா கீர்த்தி, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, மஹத் ராகவேந்திரா, ஸ்டண்ட் சில்வா, கருணாகரன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க படத்தில் பிரவீன் கே.எல். எடிட்டராக பணியாற்றினார். மேலும் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிருந்தார். 26 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைபடம் உலகம் முழுவதும் 112 கோடி வசூல் செய்து சிம்பவின் கேரியரில் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இனிமேல் எத்தனை படங்கள் வந்தாலும் கூட சிம்புவிற்கு இந்த படம் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Post a Comment

0Comments
Post a Comment (0)