60 நாளில் தீர்ந்த ஆசை! 3 மாதத்தில் கணவனுக்கு 'ஸ்லோ பாய்சன்'? குமரியில் குமுறிய முருகன்! பின்னணி?

0

கன்னியாகுமரி அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை கொலை செய்வதற்காக மனைவி ஸ்லோ பாய்சன் கொடுத்ததாகவும் தனது மனைவி மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கேரள மாநிலத்தில் காதலனை காதலி விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்தை தொடர்ந்து அதே பல சம்பவங்கள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


காதலன் ஷாரோன் ராஜை கொலை செய்வதற்கு முன்னதாக காதலி கீரிஷ்மா, ஜூஸில் விஷம் கலந்து பத்து முறை சேலஞ்ச் செய்ததும். மூன்று மாதமாக கொலைக்கு ஒத்திகை பார்த்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது கீரிஷ்மா சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அதே கன்னியாகுமரியில் கன்னியாகுமரி அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை கொலை செய்வதற்காக மனைவி ஸ்லோ பாய்சன் கொடுத்ததாக புகார் அளித்திருக்கிறார். இவருக்கும் இறச்சகுளம் பகுயை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வடிவேல் முருகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


அப்போதுதான் தனது மனைவி தனக்கு 'ஸ்லோ பாய்சன்' கொடுத்ததாக கூறியிருக்கிறார் வடிவேல் முருகன். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இருவரும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து இருக்கிறார். இதை எடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியிருக்கிறார்.
ஆனாலும் சில நாட்கள் உடல் நல பாதிப்பு இருந்துள்ளது கடந்த ஒரு மாதமாகவே மனைவி சுஜாவின் நடவடிக்கைகளில் அவருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் மனைவியை கண்காணிக்க துவங்கிய நிலையில் திருமணம் ஆகி சில நாட்களுக்கு பிறகு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தனக்கு தற்போது எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த வடிவேலு முருகன் அவரது செல்போனை சோதித்த போது முன்னாள் காதலனுடன் சுஜா தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது.


மேலும் அவரது வாட்ஸ் அப்பில் முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்ட பதிவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது மனைவி தன்னை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ய முயன்றிருப்பதாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மனைவி சுஜா முன்னாள் காதலனோடு பேசிய வாட்ஸ் அப் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சுஜாத் தன்னை வடிவேல் முருகன் தொல்லை கொடுத்து வந்ததால் தான் சாப்பிட வேண்டிய மாத்திரையை அவருக்கு சேர்த்து கொடுத்ததாகவும் அவரை கொலை செய்ய வேண்டும் என்று செய்யவில்லை எனக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வடிவேல் முருகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி திருமணத்திற்கு முன் வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் தற்போது அவருடன் சேர்ந்து தனக்கு ஸ்லோ பாய்சன் தந்து கொல்ல முயற்சித்ததாகவும் இதற்கான ஆதாரங்கள் அவரின் செல்போணில் உள்ளதாகவும் இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் .

Post a Comment

0Comments
Post a Comment (0)