கார்த்தியின் ஜப்பான்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட் வைரல்!.

0

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியன் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார்.


ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கான பூஜை சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்தது. தற்போது இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 14ஆம் தேதியான நாளை வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)