முதல் நாளில் ரூ.6.32 கோடி வசூலித்த சமந்தாவின் ‘யசோதா’

0


சமந்தா நடிப்பில் நேற்று (நவ.11) திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் முதல் நாளில் ரூ.6.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’. பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நேற்று (நவம்பர் 11) திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப்பெற்று வரும் ‘யசோதா’ வாடகைத்தாய் குறித்து பேசுகிறது. இந்தப் படத்திற்காக நடிகை சமந்தா ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளருடன் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.


இந்நிலையில், ரூ.40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல்நாளான நேற்று ரூ.6.32 கோடி வரை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





 

Post a Comment

0Comments
Post a Comment (0)