போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர்..

0

குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை.

 கன்னியாகுமரி
 நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர்.

 விண்ணப்பித்தவர்களில் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை. போலீஸ் எழுத்து தேர்வு தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 11,867 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 
ஆனால் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத் தொடர்ந்து 8,886 பேர் தேர்வு எழுதினர். 

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி, ஆரல்வாய்மொழி ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை லயோலா என்ஜினீயரிங் கல்லூரி, சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி, அஞ்சுகிராமம் ரோகிணி என்ஜினீயரிங் கல்லூரி, சுங்கான்கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது.
 இதில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் பெண்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது.


Post a Comment

0Comments
Post a Comment (0)