இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்.. எங்கெல்லாம் தெரியுமா.? மொத்த லிஸ்ட் இதோ.!!!

0

குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட கிள்ளியூர், புதுக்கடை, கொல்லங்கோடு, இரவிபுதூர்கடை, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் கம்பிளார், வலியவிளை, வட்டக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்தளவாடங்கள் மாற்றும் பணிகள் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி, கொட்டாரம், கோட்டார், ஈத்தாமொழி மின் வினியோக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது . அதன்படி இன்று கோம்பவிளை, கோவில் விளை, இலந்தையடிவிளை, கீழமணக்குடி, வடக்குசூரங்குடி, தட்டான்விளை, வள்ளுவர் காலனி, வத்தக்காவிளை, கீரிவிளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையும், கோட்டார் மின்பாதையில் இளங்கடை, ராஜபாதை, பள்ளிதெரு, வையாளிவீதி, வேம்படிதெரு, கடைத்தெரு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கொட்டாரம், மீனாட்சிபுரம் மின் வினியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)