கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் 'லிப்ட்' பழுதாகி 9 பேர் பரிதவிப்பு..

0

லிப்ட் பழுதானது

 கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் வடமாநிலத்தை சேர்ந்த 8 பேர் தங்கியிருந்தனர். சுற்றுலாவுக்காக வந்த அவர்கள் நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையை சுற்றி பார்த்தனர். பிறகு அனைவரும் லாட்ஜிக்கு திரும்பினர். தொடர்ந்து மாடியில் உள்ள அறைக்கு செல்வதற்காக 9 பேரும் லிப்ட்டில் சென்றனர். 

சிறிது தூரம் சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 9 பேர் மீட்பு இதனால் 9 பேரும் பரிதவித்தனர். இதனை அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு கருவி மூலம் லிப்ட்டை விலக்கி பெரிதுபடுத்தினர்.

 அந்த வகையில் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 9 பேரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த லிப்ட்டில் குறைந்தபட்சம் 4 பேர் தான் செல்ல முடியுமாம். ஆனால் 9 பேர் சென்றதால் லிப்ட் பழுதாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. பழுதானதால் லிப்ட்டில் 9 பேர் சிக்கி பரிதவித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி்யது


Post a Comment

0Comments
Post a Comment (0)