அதிக ஆதரவை பெற்று வரும் விஜய்யின் வாரிசு திரைப்படம்!!…

0


தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.



பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாக சிக்கல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை வாரிசு திரைப்படத்திற்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தொடர்ந்து வாரிசு படம் தெலுங்கில் வெளியாகவில்லை என்றால், இங்கு எந்த தெலுங்கு படமும் வெளியாகாது என்று இயக்குனர் பேரரசு தெரிவித்திருக்கிறார். மேலும் வாரிசுக்கு முன், பின் என சினிமாவை மாற்றி விடாதீர்கள் என்று இயக்குனர் லிங்குசாமியும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு வெளியிட்டிருக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)