கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் சண்முகவேல் ராஜா ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலையிலும் ஆய்வுப் பணி நடைபெற்றது. அதன் பின்னர், அவர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தையும் அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு கட்டினால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.