கொன்றால் பாவம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது ...

0 EINFACH ஸ்டுடியோஸின் ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் வழங்கும் அறிமுக இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் கொன்றால் பாவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்தது

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் கொன்றால் பாவம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது


ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் தளத்திற்காகத் தயாரிக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கொன்றால் பாவம் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்ததை அடுத்து விரைவில் அடுத்தக் கட்டப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
வரலட்சுமி சரத்குமார் & சந்தோஷ் ப்ரதாப் இருவரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)